அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி ஆதம்பாவா எம்.பி. யினால் ஆரம்பித்து வைப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளச்சேனை தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பிரஜா சக்தி குழுக்களின் தவிசாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,
பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :