உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 17 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் வைரசுக்கு பயந்தே பலர் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கொரோனாவுக்கு பயந்து பலர் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். அதேபோன்ற அதிர்ச்சி தரக்குடிய சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் செகேடி பகுதியை சேர்ந்தவர் பிரதிக் ராஜூ குமாவத் (31). பிளம்பர் வேலை செய்து வந்த இவர் தொண்டை நோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில், தொண்டை நோய் காரணமாக கடுமையான இருமலால் அவதிபட்டு வந்த ராஜீ குமாவத் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சினார். இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்நிலையில், ராஜீ குமாவத் நேற்று அவரது வீட்டு தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜீ குமாவத்தின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை கொரோனா தாக்கியதாக கருதுவதால், தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது.
கொரோனா அச்சம் காரணமாக நாசிக்கில் ஒரு நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.