![]() |
11.04.2020 இரவு உயிரிழந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த அழகரத்தினம் ஜீவிதன் |
![]() |
லண்டனில் 09.04.2020 இறந்துள்ள ஆனந்தவர்ணன் |
லண்டனில் புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த அழகரத்தினம் ஜீவிதன் கொரோனா
ஒரு மாதமாக முன்னர் கொரோனா வைரஸ்
தொற்றினால் பாதிக்கப்பட்டு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி 11.04.2020 இரவு உயிரிழந்துள்ளார்.
![]() |
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் 08.04.2020 பிரான்சில் இறந்துள்ளார். |

லண்டனில் 09.04.2020 இறந்துள்ளார்.


இலங்கை, இந்திய வாழ் தமிழர்களுக்கு எங்கள் அனுபவத்தின் மூலம் நாங்கள் எழுதும் எச்சரிக்கைகள் கேளிக்கை போல் இருக்கின்றது
பாரம்பரிய உணவுகள், பழக்கவழக்கங்கள் தம்மை பாதுகாக்கும் எனும் அசட்டு நம்பிக்கையில் சுய பாதுகாப்பு, தற்பாதுகாப்பு சிந்தனை இல்லாமல், நிவாரணம், ஊடகம் எனும் பெயரில் தமக்கு தானே காலனை தேடி
கொள்கின்றார்கள் .
![]() |
26.03.2020 கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரான்சில் இறந்துள்ள பசுபதி சிறிசாந்தன் |
எத்தனை சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குகளாக தொடர்ந்து தம் போக்கில் செயல் படுகின்றார்கள்
உதவி என்பது உபத்திரவம் ஆகக்கூடாது எனும் கண்டித்து உணர்த்தாத பாராட்டு, வாழ்த்துக்கள் மிகவும் வலியை தருகின்றது
அவர்கள் ஆபத்தை நோக்கி செல்வது குறித்த எச்சரிக்கைகள் செய்வோரை தூரத்தில் நின்று கொள் என மிரட்டுகின்றது
வெள்ளையர்களின் முதியோர் அதிகம் இறந்தார்கள் எனில் தமிழரில் இளையோர் இறக்கின்றார்கள்
இலங்கை, இந்திய வாழ் மக்கள் தம்மை தாமே தற்பாதுகாத்து கொள்வதோடு தற்சார்பு வாழ்க்கைக்கும் தம்மை தயார் படுத்தி கொள்ளுங்கள்.