“குர்ஆன் தடை – அரசியல்வாதிகளை காப்பாற்ற முயற்சியா? உலமா கட்சி சந்தேகம்”



முஸ்லிம்க‌ளின் புனித‌ குர்ஆன் மொழி பெய‌ர்ப்பை சுங்க‌த்திணைக்க‌ள‌த்திலிருந்து விடுவிக்காமைக்கான‌ கார‌ண‌ம் தீவிர‌வாத‌த்தை ஊக்குவிக்கும் குர்ஆனின் சில‌ வச‌ன‌ங்க‌ளே என்ற‌ க‌ருத்து உண்மையாயின் ஈஸ்த‌ர் தாக்குத‌லின் பின்னால் பிள்ளையானும் கோட்டாப‌ய‌வும் இல்லை என‌ அர‌சாங்க‌ம் ஏற்றுக்கொள்கிற‌தா என‌ இல‌ங்கை உல‌மா க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
முப்தி வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் மேலும் தெரிவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாவ‌து,

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஈஸ்தர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகள் மூலம் தெரியவருவதாக அண்மையில் ஜனாதிபதி அனுர குமார‌ பகிரங்கமாக கூறியிருந்தார். அப்ப‌டியாயின் ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு குர்ஆனோ அத‌ன் மொழி பெய‌ர்ப்போ கார‌ண‌ம் அல்ல‌ என்ப‌து கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியின் கூற்றிலிருந்து தெளிவாகிற‌து.

அப்ப‌டியிருந்தும் அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவின் ஆலோச‌னையுட‌ன் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌று ஆய்வு க‌மிட்டி குர்ஆனின் த‌மிழ் த‌ர்ஜ‌மாவில் சில‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு குறிப்புக்க‌ள் இட‌ப்ப‌டாம‌ல் அவ‌ற்றை வெளியிட‌ முடியாது என‌ ப‌ரிந்துரைத்துள்ள‌த‌ன் மூல‌ம் இந்த‌ க‌மிட்டி பிள்ளையானையும் கோட்டாப‌ய‌வையும் காப்பாற்ற‌ துணை போயுள்ள‌தா என்ற‌ கேள்வி எழுகிற‌து.

ஈஸ்டர் தாக்குத‌லுக்கு குர்ஆன் மொழி பெய‌ர்ப்பு கார‌ண‌மாயின் பிள்ளையானோ வேறு அர‌சிய‌ல்வாதிக‌ளோ கார‌ண‌ம் இல்லை என்ப‌து உறுதியாகிற‌து.

அப்ப‌டியில்லை என்றால் குர்ஆனுக்கும் தீவிர‌வாத‌த்துக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை என்ப‌து தெளிவாகிற‌து. அவ்வாறாயின் குர்ஆன் த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் சில‌ விள‌க்க‌ குறியீடு வேண்டும் என‌ ப‌ரிந்துரை க‌மிட்டி சொல்லியிருப்ப‌து வ‌டி க‌ட்டிய‌ முட்டாள்த‌ன‌மாகும்.

மேற்ப‌டி ப‌ரிந்துரை குழு உருவாக்க‌ப்ப‌ட்ட‌து க‌ட‌ந்த‌ கால‌ அர‌சாங்க‌த்தினால் என்ப‌தால் அவ‌ர்க‌ள் ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கான‌ பிர‌தான‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை காப்பாற்றுவ‌த‌ற்காக‌வே குர்ஆன் த‌ர்ஜ‌மாவில் ப‌ழி போட்டு அதை சுங்க‌த்திலிருந்து வெளியிடாம‌ல் த‌டுத்திருக்கிறார்க‌ள் என்ப‌தும் தெளிவாகிற‌து.

ஆக‌வே, மேற்ப‌டி ப‌ரிந்துரை குழுவின் கூற்று ச‌ரியா அல்ல‌து பிள்ளையான் போன்ற‌வ‌ர்க‌ள் கார‌ண என்ப‌து ச‌ரியா என்ப‌தை அர‌சு தெளிவு ப‌டுத்த‌ வேண்டும்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் கார‌ண‌ம் என்றால் ஈஸ்ட‌ர் விட‌ய‌த்தை திசை திருப்பி குர்ஆனில் ப‌ழி போட்டு அந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை காப்பாற்ற‌ மேற்ப‌டி ப‌ரிந்துரை குழுவின‌ர் முய‌ற்சி செய்த‌ன‌ரா என்ப‌தை அறிய‌ மேற்ப‌டி ப‌ரிந்துரை குழுவின‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டு விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ இல‌ங்கை உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :