பாடசாலையின் தலைவர் ஏ.ஆர்.எம். ஜூபீர் மற்றும் பணிப்பாளர் நளீமியா ஜூபீர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல பாடசாலைகளின் அதிபர்களும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு, மாணவர்களின் படைப்பாற்றலையும் பாடசாலையின் தரத்தையும் பாராட்டி உரையாற்றினர்.
நிகழ்வுக்குக் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷாம்ஸ் மகாவித்தியாலய அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம், அல்-ஜலால் வித்தியாலய அதிபர் ரீ.கே. முகமது சிறாஜ் மற்றும் , றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஏ. அஸ்தார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களின் கண்காட்சிகளை கண்டுகளித்து மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
அதிதிகள் அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு, சிறுவர் படைப்புகள் அளித்த ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் தலைவர் ஜூபீர் உரையாற்றியபோது:
“இன்றைய ஆர்ட் அண்ட் கிராஃப்ட் தினம் எங்கள் பாடசாலையின் பெருமைமிகு தருணமாகும். மாணவர்கள் வெளிப்படுத்திய படைப்பாற்றலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இணைந்து இந்த அழகிய கண்காட்சியை உருவாக்கியுள்ளது.
பலர் ‘ஏன் விடுமுறை நாளில் கண்காட்சி?’ என்று கேட்டனர். பாடசாலை நாளில் நடத்த விரும்பினோம்; ஆனால் சூழ்நிலை வாய்க்காததால் இன்று நடத்த வேண்டியிருந்தது. தேவையெனில் இதை மேலும் ஒரு அல்லது இரண்டு நாட்கள் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யூனிவர்சல் முன்பள்ளி கடந்த 11 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் ஜூபீர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது யூனிவர்சல் முன்பள்ளி பாடசாலையின் கலை–கைவினைக் கண்காட்சியில் உரையாற்றிய மல்ஹருஸ் ஷாம்ஸ் மகாவித்தியாலய அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, இந்நிகழ்வு மிகவும் வித்தியாசமானதும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய உயர்தர கண்காட்சியாகவும் இருப்பதாகவும் : யூனிவர்சல் முன்பள்ளி பாடசாலை இந்த பிராந்தியத்தின் முன்மாதிரிப் பாடசாலை என்றும் பாராட்டினார்.
அவரது உரையில் யூனிவர்சல் முன்பள்ளிபாடசாலை – முன்மாதிரிப் பாடசாலை என்றும் பிராந்தியத்தில் பல முன்பள்ளி பாடசாலைகள் செயல்பட்டாலும் ஆங்கிலம் + இஸ்லாமிய நடைமுறைகள் இணைந்த தனித்துவமான கல்வியை வழங்கும் முன்மாதிரிப் பாடசாலை இதுவே எனவும் தெரிவித்தார்.
கல்வி தரத்திலும், நிகழ்வுகளின் தரத்திலும் இந்தப் பாடசாலை சிறந்த முன்னணியில் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
இன்றைய கண்காட்சி இரண்டாம் நிலை பாடசாலை அளவிலான தரத்துடன் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
கழிவுப்பொருட்களையே புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரித்திருப்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ள படைப்புத் திறனைக் காட்டுகிறது எனவும் “இது உண்மையான கைவினை பணியின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது” என்றும் தெரிவித்தார்.
இத்தகைய உயர்தர கண்காட்சியை திட்டமிட்டு நிறைவேற்றிய
பணிப்பாளர் நளீமியா ஜூபீர் அவர்களுடைய படைப்புத் திறன், கனவு மற்றும் உழைப்பு முக்கிய காரணம் என வலியுறுத்தினார்.
“சிறிய வயதிலிருந்தே அவர்களுக்கு இருந்த கலை ஆற்றல், இன்று மாணவர்களின் கைகளில் மலர்ந்து நிற்கின்றன” என்றும் தெரிவித்தார்.
பெற்றோர்களை நோக்கி உரையாற்றிய றிப்கா, பிள்ளைகள் தினமும் என்ன கற்றார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தரம் 7–10 காலத்தில் பெற்றோர்களின் பங்கு மிக அவசியம்.
ஆண் குழந்தைகள் நண்பர்கள் வட்டத்தால் எளிதில் பாதிக்கப்படுவதால்,
நண்பர்களை கவனிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். பிள்ளைகளை நேர்மறை வழியில் நடத்துவது குடும்பத்துக்கும் சமூத்துக்கும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
யூனிவர்சல் முன்பள்ளி பாடசாலை தொடர்ந்து சிறப்பாக வளர வேண்டும் என்பதே அனைவரின் ஆசை என்றும் பிராந்திய கல்வி முன்னேற்றத்திற்காக தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மானவர்கள பார்வையாளர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment