அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற பருவ மழை காரணமாக கல்முனை, கிட்டங்கி தாம்போதியில் வெள்ள நீர் பாய்வதால் அப்பாதையில் பரவிய சல்பீனியாக்களினால் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறுகள் சீர் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி விடுத்த அவசர பணிப்புரைக்கு அமைவாக புதன்கிழமையன்று (19)
அந்த சல்பீனியாக்களை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்பாதை ஊடான போக்குவரத்துகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.
சல்பீனியாக்களின் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்துகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment