சம்மாந்துறை குவாஸி நீதிமன்றத்தின் புதிய குவாஸி நீதிபதி எம்.எல். தாஸிம் அவர்கள் மீரா பவுண்டேஷன் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டார்.
மீரா பவுண்டேஷன் அமைப்பின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று முன்தினம் (15.11.2025) சனிக்கிழமை சம்மாந்துறை எல்.ரி.ஏ. தோட்டத்தில் நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர், ஆசிரியர் எம்.எம். அகமது சௌஜீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போதே அவர் கௌரவிக்கப்பட்டார்.
மீரா பவுண்டேஷன் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர்களுள் ஒருவராக உள்ள குவாஸி நீதிபதி எம்.எல். தாஸிம் அவர்களை அவ்வமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஓய்வுபெற்ற வனபரிபாலகரும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா தவிசாளருமான எம்.எல். அப்துல் மஜீட், தப்லீக் ஜமாஅத் அமீர் எம்.எல். முஹம்மட் ஹனீபா, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எல். ஹமீமா முகைடீன், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எல். நபீலா கால்டீன் ஆகியோர் இணைந்து நினைவுச்சின்னம் மற்றும் நினைவுப்பரிசு என்பனவற்றை வழங்கி கௌரவித்தனர்.
மேலும், இதன்போது ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நிறைவேற்று அதிகாரி எம்.ஐ.எம். முகைடீன் அவர்கள், குவாஸி நீதிபதியை வாழ்த்தி எழுதிய கவிதையை வாசித்துச் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் மீரா பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பிரசன்னமாகி இருந்தனர்.

0 comments :
Post a Comment