பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகத்தில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!
ந்திய தேசத்தின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (15-08-2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்.

மாநில செயலாளர் நாகூர் மீரான், சென்னை மண்டலசெயலாளர் அஹ்மத் முஹைதீன் (எ) குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மண்டலத் தலைவர் பக்கீர் முஹம்மது சுதந்திர தின உறுதிமொழியை முன்மொழிய பொதுமக்கள் அனைவரும் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர்.

தென் சென்னை மாவட்டத் தலைவர் அபூபக்கர் சாதிக் நன்றி கூறினார்.
மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசாக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :