கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஏலவே, தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment