மாணவர்களிடையே காணப்படும் எழுத்துப் பிழைகளும், தீர்வுகளும்


(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

ல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் எனவும், ஏனைய மொழிகளை விடச் சிறந்த இலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழ் என்றும், சிவபெருமான் பேசிய மொழியும் தமிழெனவும், தமிழுக்கு அமுதென்று பெயரெனவும் தமிழ் மொழியை பல சான்றோர்கள் பலவாறு போற்றியிருக்கின்றார்கள். 

அப்படிப் போற்றப்பட்ட தமிழ் மொழி ஒரு பக்கம் வளர்ச்சியடைய மறுபக்கம் அழிந்து கொண்டு செல்வதைப் பார்க்கும் போது எந்தத் தமிழ் வாசகனும் கவலைப்படாமல் இருக்கமாட்டான். இச்சிறு கட்டுரையிலே எமது பிரதேச மாணவர்களிடையே காணப்படும் எழுத்துப் பிழைகளையும், அவற்றிற்கான காரணங்களையும், தீர்வுகளையும் தர விழைகின்றேன்.

இலக்கணவாசிரியர்கள் இன்ன சொல்லுக்குக் குறித்த இன்ன இன்ன எழுத்துக்களைத்தான் பாவிக்க வேண்டும். என வரையறுத்துள்ளார்கள். இதனைச் சரிவரப் பி;ன்பற்றாத போது எழுத்துப்பிழைகள் ஏற்படுகின்றன. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது சான்றோர் வாக்கு. 

இங்கு எண் என்பது கணிதத்தையும், எழுத்து என்பது மொழியையும் குறிக்கும். இரு கண்களையும் இழந்தவனால் உலகில் எவ்வாறு வாழ முடியாதோ அவ்வாறே கணக்கும், தமிழும் தெரியாதவனாலும் வாழ முடியாது.

மாணவர்களிடம் தமிழ் மொழியில் ஏற்படும் பின்னடைவு ஏனைய பாடங்களிலும் செல்வாக்குச் செலுத்துவதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அவ்வாறிருந்தும் இன்னும் தமிழ் மொழி விடயத்தில் கூடிய சிரத்தையை மாணவர் எடுப்பதைக் காண முடியாமல் உள்ளது. 

பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில மொழிக்கு முதலிடத்தையும், தமிழ் மொழிக்கு இரண்டாமிடத்தையும் கொடுத்துக் கற்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.

எமது மாணவர்களிடையே எழுத்துப் பிழைகள் அதிகம் காணப்படுவதற்கான காரணங்களை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். அவையாவன:-

1. ஆரம்ப வகுப்புக்களில் எழுத்துக்களை சரியாக இனங்கண்டு கொள்ளாமை.

2. உச்சரிப்புத் n;தாடர்பான தெளிவின்மை.

3. பேச்சு வழக்கு எழுத்தில் ஏற்படுத்தும் தாக்கம்.

4. மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைவடைந்தமை.

5. விடயங்களை கருத்தூண்டி வாசிக்காமை.

6. தற்போது வெளியாகும் புத்தகங்களி;ல் (தனியார், பாடசாலை) காணப்படும் எழுத்துப் பிழைகள்.

7. பிறமொழிகளின் தாக்கம்.

8. பத்திரிகைளில் காணப்படும் எழுத்துப்பிழைகள்

9. ஏனைய பாடவாசிரியர்களின் கரிசனை இவ்விடயத்தில் போதியளவு இன்மை

தமிழ் மொழியிலே விடப்படுகின்ற எழுத்துப்பிழைகள்; கருத்துச் சிதைவதையும், பொருள் வேறுபாட்டையும் ஏற்படுத்தும். ஆங்கில மொழியில் உள்ள எல். என். ஆர் ஆகிய மூன்று எழுத்துக்களுக்கு நிகராக ல, ள, ழ ன, ண, ந ர, ற போன்ற சிறப்பு எழுத்துக்கள் உள்ளன. பெரும்பான்மை இவ்வெழுத்துக்களிலும் சிறுபான்மை n,N,h,? போன்ற குறியீடுகளிலும் பிழைகளை மாணவர்கள் விடுகின்றனர்.

01. ல - மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரம் தடித்துப் பொருத்துவதால் ல தோன்றுகிறது.

(உ-ம்)

தவலை - ஒரு பாத்திரம்

அலம் - கலப்பை

ஆல் - ஆலமரம்

வேலை - கடல்


02. ள - மேல்வாயை நாவின் ஓரம் தடித்துத் தடவுவதால் பிறக்கிறது.

(உ-ம்)

தவளை - ஓர் உயிர்

களி - மகிழ்ச்சி

அளம் - உப்பளம்

ஆள் - ஆளுதல், ஆண் பிள்ளை

வேளை - பொழுது.




03. ழ - மேல் வாயை நாவின் நுனி தடவுவதலால் தோன்றுகிறது.

(உ-ம்)

ஆழி - கடல்

இழை - ஆபரணம்

கழை - மூங்கில், கரும்பு

உழை - மான், பக்கம்

உழி - இடம்.




' ர

(உ-ம்)

அரி - திருமால்

ஆரல் - ஒரு வகை மீன்

கரை - உணவு, சத்தம்

ஒருத்தல் - யானை

பரவை - கடல்


04. ற - ன மேல் வாயை நாவின் நுனி மிகப் பொருந்துவதால் பிறக்கிறது.

('அண்ணம் நுனிநா நனியுறி;ல் றா வரும்||)

ற - (உ-ம்)

அறம் - தருமம்

இறை - வரி, அரசன், கடவுள்

உறி - தூக்கு

கூறை - புடவை

திறை - கப்பம்


ன (உ-ம்)

அரசன் - சிவன் ஆன் - பசு

உன்னுதல் - நினைத்தல் புனை - அலங்கரி

வன்மை - வலிமை


05. ண - நுனி நா மேல்வாயின் நுனியைச் சேர்வதலால் ணகரம் தோன்றும்

(உ-ம்)

அரண் - கோட்டை அண்ணம் - மேல்வாயில்

ஊண் - உணவு பாணம் - அம்பு

வண்மை - கொடை


06. ந - மேல் வாய்ப்பல்லின் அடியை நாவின் நுனி பொருந்த நகரம் பிறக்கும்.

(உ-ம்)

அந்நாள் - அந்த நாள் எந்நாடு - எந்த நாடு

எந்நிலை - எந்த நிலை இந்நாள் - இந்த நாள்


அவதானக் குறைவின் காரணமாக விடப்படும் பிழைகள

;' செய்தான் என்பதை செய்தன் என்றும்

அவன் - அவான் படம் - படாம்

வருகிறேன் - வருகிறென் இன்னொரு - இன்னோரு

செம்மை - சேம்மை சேய் - செய்

பொருள் - போருள்


பேச்சு வழக்கின் தாக்கம்


பஞ்சு - பஞ்சி நஞ்சு - நஞ்சி

காசு - காசி கொசு - கொசி

வசு - வசி கஞ்சி - கஞ்சு

இஞ்சி - இஞ்சு நெஞ்சு - நெஞ்சி

மாணவர்களிடையே காணப்படும் எழுத்துப்பிழைகளைப் போக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஆரம்ப வகுப்புக்களில் எழுத்துக்கள் தொடர்பான தெளிவை ஏற்படுத்தல்.

எழுத்துப் பிழைகளற்ற நூல்களையும், பத்திரிகைகளையும் வாசிக்கச் செய்தல்.

 எழுத்துக்களின் பிறப்பிடம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தல்.

பேச்சு வழக்கு சொற்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தல்.

பாடசாலைகளில் நூலக வசதியை செய்து கொடுத்தல்.

வகுப்பறைகளில் இது தொடர்பான போட்டிகளை நடாத்துதல்.

சகல பாட ஆசிரியர்களையும் எழுத்துப் பிழைகள் விடயத்தில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபடச் செய்தல்.
ஒலி, ஒளி சாதனங்களைப் பாவித்து மாணவர்கட்கு பயிற்சியளித்தல்.
மாணவர்களை கருத்தூண்டி வாசிக்கச் செய்தல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :