ஓட்டமாவடி -காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி கட்டாரில் இருக்கும் சகோதரர் முனீரிடம் வேண்டி கொண்டதற்கினங்க150000 ரூபாய்களை நன்கொடையாக குறித்த பாடசாலையின் தேவைக்கு வழங்குமாறு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்டிடம் வழங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் குறித்த தொகையானது செல்வன் கைபுல் இஸ்லாம் மூலம் கடந்த 23.04.2020 வியாழக்கிழமை பாடசாலை நிருவாகத்தின் தலைவர் எஸ்.எச். அறபாத் ஸஹ்வி, அதிபர் நெய்னா முஹம்மட் மற்றும் ஆலோசகர் ஏ.எல்.பீர் மொஹம்மட் (BA, MA கலாச்சார உத்தியோகத்தர்)முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது..அல்.ஹம்துலில்லாஹ்..
குறித்த பாடசாலையினை மேற் குறிப்பிட்ட நிருவாகம் பொறுப்பெடுத்து பல பொருளாதார, ஆளணி மற்றும் இன்னபிற கற்றல் உபகரணங்கள், தளபாட குறைபாடுகளுக்கு மத்தியில் திறம்பட நடாத்தி வருகின்றது..
ஆகவே இவ்வாறான நிலையில் பொது மக்களினதும், கல்விமான்களினதும், தனவந்தர்களினதும் உதவியினை குறித்த விஷேட தேவையுடையோர்களுக்கான பாடசாலையினை நிர்வகிப்போர் வேண்டி நிற்கின்றனர்...
ஆகவே இவ்வாறான குறித்த நிலைமையினை கட்டாரில் தொழில் புரியும் சகோதரர் முனீரிடம் எடுத்துகூறிய பொழுது மனமுவர்ந்து நன்கொடையாக 150000ரூபாய்களை அல்லாஹ்வின் பாதையில் அதே நாட்டில் பணி புரியும் அஹமட் இர்ஷாட்டிடம் வழங்கி வைத்தார்..
மேலும் பல சிரமங்களுக்கு மத்தியில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்காக செயற்பட்டு வரும் குறித்த பாடசாலையின் நம்பிக்கைகக்கு பாத்திமானவர்கள் என பிரதேச மக்களால் அலசப்படும் நிருவாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக மனமுவர்ந்து செல்வந்தர்கள், கல்விமான்கள் அஎன சகல தரப்பினரும் நன்கொடைகளையும் உதவிகளையும் செய்வது காலத்தின் தேவை என்பதற்கு அப்பால் எதனாலும் ஈடு செய்ய முடியாத மானுட பன்பாகவும் உள்ளது..