ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு


க.கிஷாந்தன்-
வா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன் 2 போனஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது.

இதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர்.
சஸீந்திர ராஜபக்ச, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் 6 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க பதவி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததது மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -