ஊடகவியலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள், இளைஞர் யுவதிகள் என அனைத்து தரப்பினருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதல்களை கொடுக்கும் விதமாக, 'AI யோடு விளையாடு...' என்ற தலைப்பில் இத் தொடர் செயலமர்வுகள் இடம்பெறவுள்ளன.
அதனடிப்படையில், முதற்கட்டமாக - ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவை (AI @ Media) எவ்வாறு வினைத்திறனுடன் பயன்படுத்தி நேரத்தை மீதப்படுத்தவும், மேலதிக வருமானத்தை ஈட்டவும் முடியும்..? என்ற கருப்பொருளில் 'இலவச வழிகாட்டல் செயலமர்வு' ஒன்றை பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைத்தளங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு - பின்வரும் நேர ஒழுங்கின்படி நடாத்த உள்ளது.
காலம் : 27 / 07 / 2025 ( ஞாயிற்றுக் கிழமை )
நேரம் : காலை 8.30 - பி.ப 1.30 மணி வரை
இடம்: நாஸ் கெம்பஸ் கேட்போர் கூடம், கொமர்ஸியல் வங்கி கட்டிட மேல்தளம், டெலிகொம் வீதி, காத்தான்குடி.
எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர் மற்றும் ஊர், மாவட்டம், பணியாற்றும் ஊடகம் போன்ற விபரங்களை எமது 077 280 89 20 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வருகையை உறுதிப்படுத்தவும்.
இவ் இலவச செயலமர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படுவதோடு சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முதலில் உறுதிப்படுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.நன்றிகள்.
0 comments :
Post a Comment