இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முஹர்ரம் புது வருட நிகழ்வுகள்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைவாக இஸ்லாமிய புது வருட முஹர்ரம் தின நிகழ்வுகள் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி அஷ்ஷேக் எஸ்.எம்.எம். மஷாஹிர் (நளீமி) கலந்த கொண்டதோடு, கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேக் யூ.எல்.றிபாய்டீன்( ஹாசிபி) கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், தலைமையுரையினை பாடசாலையின் அதிபர் நிகழ்த்தினார். அவர் உரையாற்றுகையில், இவ்வாறானதொரு நிகழ்வினைத் திட்டமிட்டு வடிவமைத்த இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில், மாணவர்களின் இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் ஊடகத்துறைக்காக ஆற்றிவரும் சிறப்பான பணிக்காக பாடசாலை அதிபர் மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இந்நிகழ்வில், பிரதம அதிதியினால் எழுதப்பட்ட நூலின் பிரதிகள் அதிபர் மற்றும் நிகழ்வின் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :