மருதமுனை ஷம்ஸ் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்.




ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள மாணவர் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தேசிய ரீதியாக ஒரே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் (09) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் முன்னெடுக்கப்பட்டது

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளீன் ஸ்ரீ லங்கா டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெ.எம்.நிஜாமுத்தீன் அவர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு பாடசாலையின் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்து டெங்கு இல்லாத பிரதேசமாக மாற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனை அடுத்து பாடசாலையின் பிரதான நுழைவாயில் இருந்து பிரதான வீதி ஊடாக கிளீன் ஸ்ரீலங்கா தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இடம்பெற்றது.

பாடசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட உதவி அதிபர் எம். எஸ். முஹிஸா சர்மூன் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி. அஹமட் ராஜி, பிரதி அதிபர் ஏ.ஆர்.என்.மன்பூசா, உதவி அதிபர்களான எம்.ஐ.சர்மலா, எஸ்.நஹீதா, ஏ.சி.எம்.றக்ஸான் உட்பட பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :