தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வசீர் தலைமையில்2025 ஆம் ஆண்டு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டுஇ இன்று 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை(7) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,பொலீஸ் திணைக்களமும் இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை காரைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின் போது, சுகாதார உத்தியோகத்தர்களும் பொலீஸ் அதிகாரிகளும் இணைந்து,அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள்,வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள்,தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள்,வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள்
என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.

இந்த நிகழ்வில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் காரைதீவு பொலீஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :