முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் உயர்தர மணவர்களுக்கும் சாதாரணதர மாணவர்களுக்குமிடையில் மோதல்

மாவ­னெல்லை - ஹெம்­மாத்­த­கம பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத்தில் கற்கும் மாணவக் குழு­வொன்றும் அதே பாட­சா­லையின் உயர் தரத்தில் கற்கும் மாணவக் குழு­வொன்றும் நடு வீதியில் மோதலில் ஈடு­பட்ட சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது.

நேற்று முன்தினம் மாலை இந்த மோதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், இதன் போது இருவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில், அது தொடர்பில் ஐந்து மாண­வர்­களை நேற்று காலை கைது செய்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த ஐந்து மாண­வர்­களும் நேற்று பிற்­பகல் மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­துடன் இதன்­போது அவர்கள் தலா ஐயா­யிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­யிலும் செல்ல நீதிவான் அனு­ம­தித்­துள்­ள­துடன் இது தொடர்­பி­லான வழக்கு மீள அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

நேற்று முன்­தினம் மாலை குறித்த மாணவக் குழுக்கள் நடு வீதியில் மோதிக் கொண்­டுள்­ளமை தொடர்பில் காய­ம­டைந்த இருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஹெம்­மாத்­த­கம பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். ஹெம்­மாத்­த­கம பதில் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அஷோக பண்­டார தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை நடத்­திய நிலையில், மோத­லுடன் தொடர்­பு­டைய ஐந்து மாண­வர்­களை நேற்று கைது செய்­தனர்.

இதன்­போது பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில், இரு மாணவக் குழுக்களிடையே நிலவிய பழைய பகைமை மோதலுக்கு காரணம் என தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -