அமைச்சர் நஸீரினால் மண்டூரில் புதிய வைத்தியசாலை திறப்பு





சப்னி அஹமட், அபு அலா-

மிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை ஒரு சில சிங்கள அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் ஒற்றுமைகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளாதவும், முஸ்லிம் தமிழ் பிரதேசத்தங்களில் இடம்பெறும் அத்துமீறல்களால் இன ஒற்றுமை கடந்த ஆட்சி போல் இல்லாமல் விடும் அபாயம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் மட்டக்களப்பு, மண்டூர்பிரதேசத்தில் புதிதாக 5.3 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆயுள்வேதமத்திய மருந்தகத்தினை அம்மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (04.09.2017)இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து கூறுகையில்;

ஸ்ரீலங்கா முஸ்ளிம் காங்கிரஸிம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையுடன்நல்லாட்சி அரசில் எமது ஒற்றுமையையும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டுவருகின்றோம். கடந்த ஆட்சியில் சில பெளத்த அமைப்புக்களில் தமிழ் முஸ்லிம்ஒற்றுமைகளையும் சீரழித்து இதனால் அவ்வாட்சியை சிறுபான்மை மக்கள்விரட்டினார். ஆனால் இன்றும் நல்லாட்சி அரசிலும் சில பெளத்த அமைப்புக்களின்கொடுபுடிகள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுகின்றது.

இறக்காமம், மானிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகளைகொள்வணவு செய்து சிங்கள மக்களே இல்லாத இடத்தில் சிங்கள புத்தர்சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றாலும் அவற்றை நாம்முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் முஸ்லிம் சிங்கள ஒற்றுமைகள்சீரழிக்கப்படுகின்றதை நாம் அவதானத்துடன் செயற்பட்டு அவற்றுக்கு சரியானதீர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மாகாணரீதியாக சுதேசத்திணைக்களம் இன்று அதிக வளர்ச்சியடைந்துவருவதை இட்டு நான் அகம் மகிழ்கின்றேன். நாட்டு வைத்திய முறைமை இன்றுஎமது கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வருகின்றது. நான் மாகாண அமைச்சைபொறுப்பெடுத்த போது சுதேச திணைக்களத்திற்கான நிதி போதாமையாகஇருந்ததை கவனத்திற்கொண்டு சில திட்டங்களை வகுத்து தற்போதுசுதேசத்திணைக்களத்திற்கும், சுகாதாரத் திணைக்களத்திற்கும் நிதிகளைப்பெற்று வைத்தியசாலைகளை மாகாண ரீதியாக சிறப்பாக செயற்பட முயற்சிசெய்து சிறந்து முறையில் மேற்கொண்டு வருகின்றோம். அது மாத்திரம் இன்றிதற்காலிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளை இன்று நிரந்திரகட்டிடங்களுக்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதன் போது கெளரவஅதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான நடராஜா, துறைரட்னம், கிழக்கு மாகாணசுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முருகாணந்தன், கிழக்கு மாகாணசுதேச திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீதர்உள்ளிட்டவர்களுடன் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்புபிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -