கல்முனை வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கல்முனைக்குடி பிரதேச பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்கான இலவச பாதணி வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது கமு/கமு றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கல்முனைக்குடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 125 மாணவர்களுக்கு கலாநிதி அல்தாப் முகையதீன் அவர்களின் தனிப்பட்ட நிதியுதவியுடன் சாய்ந்தமருது 15,17ம் கிராம உத்தியோகத்தர் எல். நாஸரின் முயற்சியினால் இலவசமாக இப்பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோரும் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ ரஹ்மான் மற்றும் பாடசாலை அதிபர்கள்,சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இலவசமாக இப்பாதணிகளை பெற்றுத் தந்தமைக்காக சாய்ந்தமருது கல்முனை கல்விச் சமூகம் கலாநிதி அல்தாப் முகையதீனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.