ஐ.பி.எல் போட்டியில் கோஹ்லி விளையாடமாட்டார்..!

ந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இந்த வருடம் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆஸி அணியுடனான போட்டியில் கோஹ்லியின் வலது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கோஹ்லி ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருப்பதுடன், அவர் ஐ.பி.எல். தொடரில் 973 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டியில் இவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

ஆனால், கோஹ்லி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாட மாட்டார் என பெங்களூர் அணி நிர்வாகம் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -