பிள்ளையின் நோய் தொடர்பில் பெற்றோரின் கண்ணீர் கதை ..!

பிள்ளையின் நோய் நிலை காரணமாக 12 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் பெற்றோர் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. கண்டி தெல்தொட்ட, ஹயித்வத்தையைச் சேர்ந்த ஆர்.எஸ். தனுஷ்கன், என்ற சிறுவன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவர். 

கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்து ஒருவயதிலேயே அவருக்கு இதயப்பகுதியில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது அவரது வயது 13. அவர் வயதுக்கு மீறிய எடை அதிகரிக்கும் நோய் நிலையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். நிரந்தர வீடில்லாத அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளனர். 

மருத்துவ செலவிற்கும் அவர்களுக்கு உதவ யாரும் இல்லாத நிலையில் உள்ள அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது பிள்ளைக்கு மருத்துவம் செய்ய உதவுமாறு அப்பெற்றோர் அரச அதிகாரிகளிடம் கோரிய போதிலும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -