சற்றுமுன் காத்தான்குடி டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள டிப்போவுக்கு சென்று கொண்டிருக்கும் போது அதே வழியால் கடற்கரை பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது .
குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்தன. மேலும் இதன் போது ஏட்பட்ட சேதங்கள் தொடர்பில் சரியாக தெரியவில்லையெனவும் நாம் தொடர்பு கொண்டு கேட்ட நண்பர் (மிஷ்பாக் கபீர்) தெரிவித்தார். பிந்திக்கிடைத்த செய்தியில்: மேலும் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.