எம்.ஜே.எம்.சஜீத்-
ஏறாவூர் மிச்நகர் கிராம மக்களின் காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் எம்.எஸ் சுபையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் (22) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹும் டாக்டர் பரீட்மீராலெப்பை அவர்களினால் குடியேற்றப்பட்ட மக்களின் காணி உறுதிப்பத்திரம் இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருப்பதனால் அம்மக்கள் ஆவண உறுதிப்படுத்தல்கள் மற்றும் பல பிரச்சினைகளைஎதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அம்மக்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவைத்தொகையினை கடந்த 2012 ஆம் ஆண்டு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மூலம் என்னால் பெற்றுக்கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும் அம்மக்களுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை. எனவே அம்மக்களது காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்டவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரி உறுதிப்பத்திரங்களை வழங்க மிகவிரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.