டெங்குத் தாக்க தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!



அபு அலா-
திருகோணமலை மாவட்டத்தில் டெங்குத் தாக்கத்தின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கைக்கள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கினங்க திருகோணமலை சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களிலும் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கைக்கள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் இன்று (23) காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசோதனை நடவடிக்கைக்களின்போது, பல இடங்கள் பார்வையிடப்பட்டதுடன், டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், உயிரிழப்புகள் பற்றிய அறிவுருத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :