சிகெரெட்டுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முடியும்.



எப்.முபாரக் -
2020 - 2021 ஆண்டுகளில் முறையான முறையில் சிகரெட்டுக்கான வரி அரவிடப்படாமையினால் சுமார் ரூபாய் 100 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2022ம் ஆண்டு வரவு செலவுதிட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முஹம்மது சபான் அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது சம்பந்தகாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அவர் இன்று(29) மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்து வந்த வருடங்களில் எமது ஜனநாயக சோசலிச குடியரசானது பலதரப்பட்ட முக்கிய பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மையே, இந்நிலையில் மிகப்பெரிய பி ரச்சினையாக கடன் பிரச்சினை தற்போது தலைதூக்கியுள்ளது. அத்துடன் முடிந்துவிடாது மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளும் படியாக COVID-19 காரணமாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளமையை காணமுடிகிறது. இத்துறைகளில் வீழ்ச்சியானது நாட்டிற்கு கிடைக்கவிருந்த பல பில்லியன் வருமானத்தை இலக்கச்செய்துள்ளது. இதனால் நாடு தற்போது கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இப்பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய பல்வேறு ஆலோசனைகள் நிதிஅமைச்சினால் முன் வைக்க பட்டபோதிலும் அவற்றில் பெரும்பாலான ஆலோசனைகளுக்கு பொதுமக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆனாலும் சிகெரெட் மீதான வரி விதிப்பிற்கு எவ்வித எதிர்ப்பும் நாட்டு மக்கள் தெரிவிக்காத நிலையிலும் இன்னும் சிகெரெட் மீதான வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தாமல் கடந்த 3 வருடங்களாக அப்படியே அரசு வைத்திருப்பது ஏன்?

இலங்கை அரசானது சுமார் கடந்த 2019 ம் ஆண்டிலிருந்து எந்தவொரு வரி விதிப்பையும் சிகெரெட் மீது மேற்கொள்ளவில்லை ,
அதன் விளைவாக நாட்டிற்கு சுமார் 100 பில்லியன் ரூபாய் வருமானம் இழக்கப்பட்டுள்ளமை பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த 3 வருடங்களாக பாராளுமன்றதில் முன்மொழியப்பட்ட எந்தவொரு வரவுசெலவு திட்டத்திலும் இந்த சிகெரெட்டின் வரி அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு சம்மந்தமான எந்த சட்டங்களிலும் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை, அவை சம்மந்தமாக எந்தவித முன்மொழிவுகளும் செய்யப்படவில்லை.
இந்த சிகெரெட்டின் வரிவிதிப்பு சம்மந்தமான கவனமற்ற தீர்மானம் காரணமாக இலங்கையில் இயங்கி வரும் CTC எனும் பெயருடைய புகையிலை பல்தேசிய நிறுவனத்திடமிருந்து பெறவேண்டிய சுமார் 100 பில்லியன் பெறுமதியான வருமானமானது கிடைக்கேபெறாமல் இழக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் இலங்கை அரசானது நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான முதலீட்டு நிதிகளை வெளிநாடுகளிலிருந்து கடனாக பெற்று வருகின்றமை பெரும் வருத்தத்தை அளிக்கின்றது. இந்த சிகெரெட்டின் விலை மற்றும் வரியை உயர்த்தி பெற வேண்டிய வருமானத்தை கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகளை இந்த அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கடன்தொகைகளை பெற்று செய்கின்றமை மிகப்பெரிய தவறாகும்.

உதாரணமாக, அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை ரூபா 100 பில்லியன், விமான நிலையத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை ரூபா 39 பில்லியன் ,
மொரகஹ கந்த நீர்ப்பாசன திட்டத்திக்கான தொகை 91 பில்லியன், மத்தளை விமான நிலையத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூபா 21 billion, ஆகியவற்றின் மூலம் இழக்கப்பட்ட வரி வருமானங்களின் தொகையயை அறிந்துகொள்ள கூடியதாக உள்ளது.
மேலும் ஆழமாக நோட்டமிடுகையில் இந்த விடயத்தில் இலங்கை அரசனது மௌனம் சாதிப்பது ஏன்?

வரி அதிகரிப்பு சம்மந்தமான பயன்தகு முறையான வரி முறைமை ஒன்றை அறிமுக படுத்தப்போவதாக அப்போதைய பிரதமரும் நிதி அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
2021ம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில் கூறிஇருந்தபோதும் இன்னும் அது சம்மந்தமான எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமலிருப்பது ஏன்?

சிகெரெட்டின் வரி மற்றும் விலையை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல நிதி சம்மந்தப்பட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கமுடியும். உதாரணமாக சிகெரெட்டின் வரியை 10% மாக அதிகரிப்பதன் மூலம் அதன் பாவனையை அண்ணளவாக 5%தினால் குறைத்து நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிகெரெட்டின் விலையை 20 ரூபாவால் அதிகரித்தால் வருடத்திற்கு சுமார் 52 பில்லியன் ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், நாட்டில் நிலவும் ஆசிரியர், அதிபர் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு சம்மந்தமான பிரச்சினைக்கும் முற்று முழுதான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே முன்மொழியப்படவுள்ள இந்த 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சிகெரெட்டுக்கான வரியை 10% ஆளும் விலையை 20 ரூபாவாளும் அதிகரிப்பதற்கு நாம் அனைவருமாய் சேர்ந்து குரல்கொடுப்பதினூடாக நாட்டிற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை போக்க உதவுவதோடு நாட்டில் சிகெரெட் பழக்கவழக்கங்களினால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :