தேசிய நீர் வழங்கல் சபையின் உத்தியோகஸ்தரும், தேசிய நீர் வழங்கல் சபையின் தேசிய உதைப்பந்தாட்ட அணியின் தலைவரும், தேசிய நீர் வழங்கல் சபையின் பொதுஜன பெரமுன தொழிற்சங்க கிழக்கு மாகாண இணைப்பாளரும், அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினரும், நிந்தவூர் கென்ட் விளையாட்டு கழக உறுப்பினரும், தேசிய சேவைகள் உதைப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிந்தவூர் பிரதேச இளைஞர் இணைப்பாளரும், பொதுஜன பெரமுன நிந்தவூர் மத்திய குழு செயலாளரும், சமூக ஆர்வலருமான ஆதம் பாஷித் ஹுஸ்னி அவர்கள் வனவிலங்குகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திஸாநாயக்க (MP) அவர்களின் நிந்தவூர் பிரதேச இணைப்புச் செயலாளராகவும், நிந்தவூர் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவிலங்குகள் இராஜாங்க அமைச்சர் கெளரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் காரியாலயத்தில் கெளரவ அமைச்சரின் செயலாளர் திரு. சுபுன் திசாநாயக்க அவர்களினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.




0 comments :
Post a Comment