கொவிட்டுக்கு மத்தியில் கோமாரியில் 5 கோடியில் வீதி புனரமைப்பு!வி.ரி.சகாதேவராஜா-
னாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்திட்டத்தின்கீழ் நேற்று(21)வெள்ளிக்கிழமை கோமாரிப்பிரதேசத்தில் 5கோடி ருபா செலவில் 2கிலோமீற்றர் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கிறது.

சமகால கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொத்துவில் பிரதேசசபைக்குட்பட்ட கோமாரிப்பிரதேசத்தில் காளிகோவில் வீதியே இவ்விதம் கொங்கிறீட் விதியாக மாற்றம் காணவிருக்கிறது.

கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் த.தே.கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரனின் வேண்டடுகோளுக்கிணங்க பொதுஜனபெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பிரதேசசபைஉறுப்பினருமான எ.எம்.அப்துல் மஜீத் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.வீரசிங்க ஆகியோரின் முயற்சியால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று(21)வெள்ளிக்கிழமை காலை வீதி செப்பனிடும் பணி ஆரம்பித்தவைக்கப்பட்டது. கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் த.தே.கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன், பொதுஜனபெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பிரதேசசபைஉறுப்பினருமான எ.எம்.அப்துல் மஜீத் பொத்துவில் பிரதேசசபைத்தவிசாளர் எம்.எச.அப்துல் றஹீம் உறுப்பினர் எ.எல்.எம்.மர்சூக் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் மேடும் பள்ளமுமாக இருந்த கிறவல் வீதியே, உறுப்பினர் சுபோதரனின் முயற்சியால் தற்போது கொங்கிறீட்வீதியாக மாற்றம் காணுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :