பூரண குணமடைந்து வீடு திரும்பினார் முஜிபுர் ரஹ்மான்!J.f.காமிலாபேகம்-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வீடு திரும்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் உடனடியாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மாலை பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மனைவி, பிள்ளைகள் என வீட்டாருக்கு மத்தியில் தாம் தொடர்ந்தும் தனிமையில் இருப்பதாக அவர் ஊடகமொன்றுக்கு இன்று குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தில் கொவிட் தொற்றுக்கு இலக்காகிய 12 உறுப்பினர்களில் 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :