மடிகனணிகளை வழங்கும் 12 ஆவது அணியில் பண்டார கொஸ்வத்தவைச் சேர்ந்த எம்.என்.எவ். சப்fரா, பாணந்துறையைச் சேர்ந்த எம்.எவ். ஐஸா, மாடுல்சீமையைச் சேர்ந்த எஸ்.ஜெ. விர்ஜினி, கண்டி உடதன்விலவைச் சேர்ந்த ஏ.எஸ். அஹமட், விபிலையைச் சேர்ந்த ஆர்.எம். சாஹிரா பானு ஆகியோரது பெயர்களை ஹாஷிம் உமர் பௌண்டேசனின் தெரிவுக் குழு முன்மொழிந்துள்ளது.
கொழும்பிலுள்ள பௌண்டேசனின் தலைமையகத்தில் குறித்த நேரத்தில் இடம்பெறவுள்ள மடிகனணிகளை வழங்கிவைக்கும் நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மிகப்பிரபல்யமான ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதானமாக தேவைப்படும் மடிக்கணினிகளை "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கடந்த நோன்புப் பெருநாளிலும் வரவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளிலும் ஊடகவியலாளர்களை மகிழ்விக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகளுக்கு நிதியுதவிகளைச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment