அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை குழு மூலம் போட்டியிட்டு 1870 வாக்குகளைப் பெற்று தனது முதலாவது அரசியல் பிரவேசமாக பிரதேச சபை உறுப்பினரானார்.
அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு அதி கூடுதலான (7767) வாக்குகளைப் பெற்று சபையின் தவிசாளராக முழுமையாக செயலாற்றினார்.
அடுத்து 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற வட்டார முறைமையிலான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வட்டாரத்தை வென்று மீண்டும் தவிசாளரானார்.
அதனைத் தொடர்ந்து 2020 யில் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசிக் சின்னத்தில் போட்டியிட்டு (24,055) வாக்குகளைப் பெற்று கட்சிக்குப் பலம்சேர்த்தார்.
இறுதியாக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு 6500 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் இவ்வருடம் 2025யில் இடம்பெற்ற வட்டார தேர்தலில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தோல்வியடைந்தார்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் குறையேதும் சொல்லாதளவு சிறந்த செயற்பாடுகளை, மக்கள் பணிகளை, சமூக சேவைகளை சிறப்பாக செய்து காட்டியவர்.
அதுபோல் கட்சிக்கு விசுவாசமாகவும் தலைமைக்கு கட்டுப்பட்டவராகவும் செயற்பட்ட காரணத்தினால் இன்று அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேசிய பட்டியல் மூலம் தலைமையினால் வழங்கப்படுகிறது.
இவர் சிறந்த விவசாயி என்று ஜனாதிபதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட மர்ஹூம் முகமது ஷரீஃப் மற்றும் சபூரா உம்மா தம்பதிகளின் எட்டு மக்களில் நான்காவது பிள்ளையாகப் 10.09.1971 ஆம் ஆண்டு பிறந்த இவர் நாடறிந்த மாவட்ட மேற்பார்வை சுகாதரா பரிசோதகர் எம்.எஸ்.மலீக் அவர்களின் சகோதரராவார்.
தன்னுடைய ஆரம்பக் கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியிலும் தொடர்ந்த வாஷித் 19.06.1991 ஆண்டில் அரச துறைக்குள் நுழைந்து இன்றுவரை 35 வருடங்களாக சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தராக பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எல்.முனாஸ் (Doha Qatar)
அட்டாளைச்சேனை
28.06.2025
0 comments :
Post a Comment