யாழ். பாதயாத்திரீகர் கதிர்காமத்தில் திடீர் மரணம்!



வி.ரி. சகாதேவராஜா-
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார்.
புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம் ( வயது 52) என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர்.

கடந்த மே மாதம் 01 ஆம் தேதி உடப்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

அவர் பாதயாத்திரை செல்வது மூன்றாவது தடவை ஆகும்.

இம்முறை கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பஸ்ஸில் கதிர்காமம் வந்தனர்.

நேற்று 11 மணியளவில் குடும்பத்தினர் சகிதம் கதிர்காமம் ஆலயத்துக்குள் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.

மறுகணம் அவரை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர் .
அங்கே அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது.
தற்போது அவரது பிரேதம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அவரது பிரதேச பரிசோதனையின் பின் அவரது பூதவுடல் உடப்பிற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது என்று பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :