பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது


கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு பயன்களுக்கான வேலைத்திட்டத்தில் முதியோர்இ ஊனமுற்றோர்இ சமுர்த்தி மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணி தற்பொழுது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டததை கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு விரிவான வகையில் நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த சமூக பயன்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றிருந்த போதிலும் பயன்கள் கிடைக்காதவர்களுக்கும் நிதி பயன்களை வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 20ஃ21 ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.. இதற்கமைவாக முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சம்ந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்

இருப்பினும் ஏதேனும் நடைமுறை நிலைமையின் காரணமாக சம்பந்தப்பட்ட கொடுப்பனவை வழங்குவதற்காக பிரதேசத்தில் பொது இடத்தில் அல்லது அலுவலகம் பயன்படுத்தப்படுமாயின் அவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து சுகாதர ஆலோசனைகளையும் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கின்றது.

இதேபோன்று இவ்வாறான இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடாதிருப்பதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனிப்பட்டவர்களிற்கிடையிலான இடைவெளியை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கமைவாக பொது இடங்களுக்கு பொதுமக்கள் அழைக்கப்படுவார்களாயின் குறைந்த எண்ணிக்கையிலானவர்களைக்கொண்ட குழுக்களுக்காக தனித்தனியாக குறிப்பிட்ட நேரத்தை வழங்கி அழைத்தல் போன்ற திட்டமிட்ட நடைமுறையை கடைபிடிக்குமாறு அரசாங்கம் சம்பந்தப்ட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கேட்டுக் கொள்வதுடன் இவ்வாறு வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைவாக செயல்படுமாறு பயன்களை எதிர்பார்த்துள்ள பொதுமக்களிடமும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதே போன்று கொவிட் 19 தொற்றின் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து குழுக்களுக்கும் சம்பந்தப்பட்ட பயன்களை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைவாக தற்பொழுது இந்த பயன்களை பெற்றுக் கொள்வதற்கான தகுதியை கொண்டுள்ளவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ள குழுக்களுக்கு மேலதிகமாக இந்த நிவாரணம் மேலும் கிடைக்கப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியில் 20; மற்றும் 21 ஆகிய இரு தினங்களில் அடையாளங் காணப்படும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏனைய குழுக்களுக்குமாக ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியளவில் பயன்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏப்ரல் மாதம் 20ஆம் 21ஆம் ஆகிய 2 தினங்களில் நிவாரணம் வழங்கப்பட்ட பின்னர் இ தொடர்ந்தும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். என்று மேன்முறையீட்டை சமர்ப்பித்திருப்போரில் தகுதிகளை பூர்த்தி செய்வார்களாயின் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதே போன்று தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்தாமலும் அழுத்தத்திற்கு உட்படாமலும் இ எப்பொழுதும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் புரிந்துணர்வுடன் செயல்பட்டு இந்த பயன்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -