ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் உத்தரவுக்கமைய தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளில் மலையக பகுதியில் வாழும் 14000 பேருக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளுத.
இந்த நடவடிக்கைக்கு அமைவாக டிக்கோயா , பட்டல்கலை, தரவளை பகுதிகளில் இன்று (10) ம் திகதி 672 பேருக்கு 5000 ரூபா வீதம் அட்டன் சமூர்த்தி வங்கி ஊடாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் தலைமையில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதில் முதியோர் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, பொதுமக்கள் கொடுப்பனவு மற்றும் நோயாளர் கொடுப்பனவு என்பன அடங்குகின்றன. குறித்த கொடுப்பனவுகளை கிராம சேவகர், சமூர்த்தி வங்கியின் அதிகாரிகள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவினால் இன்று அந்த பிரதேசங்களுக்கே சென்று வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த கொடுப்பனவுகள் சுயதொழிலில் ஈடுபட்டு தற்போது தொழிழந்துள்ளவர்கள், கொழும்பிலிருந்து இப்பிரதேசத்திற்கு வந்து வேலையின்றி இருப்போர், வேலையற்றவர்கள் , ஓய்வூதியம் பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இது குறித்து பயனாளிகள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் வேலை இன்றி மிகவும் வறுமையிலேயே இருந்து வருகிறோம.; எங்களுக்கு தற்போது நோய்க்கு கூட மருந்து எடுக்க பணமிலலை. அது மாத்திரமன்றி சாப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை.இந்நிலையில் அரசாங்கம் எங்களை பற்றி சிந்தித்து எடுத்திருக்கிற இந்த முடிவுக்கு நாங்கள் பாராட்டுவதோடு நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம்.
இது குறிதது மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் நான் வீட்டில் தான் இருக்கிறேன். எனது கணவர் முச்சக்கர வண்டி ஓட்டி வந்த பனத்தில் தான் நாங்கள் எங்கள் வாழ்தாரத்தினை நடத்தி வந்தோம். ஆனால் தற்போது வேலையில்லாததால் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம்.
இந்நிலையில் எங்களுக்கு இந்த 5000 ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
இதே வேளை கொழும்பிலிருந்து வந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த காலங்களில் கொழும்பில் தான் வேலை செய்தேன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரசசினை காரணமாக தொழிலின்றி வீட்டில் தான் இருக்கிறேன்.
வேலை இல்லாததன் காரணமாக நானும் எனது குடும்பமும் மிகவும் கஸ்ட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளோம் இந்நிலையில் எமக்கு இந்த உதவி வழங்கியமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.