24 மணி நேரத்தில் சுமார் 4500 பேர் மரணம்... உலகளவில் இது அதிகம்..! அமெரிக்காவை கலங்கடிக்கும் கொரோனா


”அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,784 பேர் உயிரிழந்துள்ளனர்”
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4500 பேர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஊஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம் பதித்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34,784 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து இத்தாலியில் 22,170 பேரும், ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்சில் 17,920 பேரும், பிரிட்டனில் 13,729 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92,224-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 448 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்திக் சுமார் 4500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இதில் கொரோனா சாத்தியத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -