வாழ்க்கை விலைமதிப்பற்றது தான் ; ஆனால் பொருளாதாரமும், தொழில்களும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்.
பிரேசிலின் சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் போல்சொனாரோவிடமிருந்து தகவல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை விலக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிபருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாண்டெட்டா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய சுகாதார அமைச்சராக நெல்சன் டீச்சை நியமித்துள்ள போல்சொனாரொ, வாழ்க்கை விலைமதிப்பற்றது தான் ; ஆனால் பொருளாதாரமும், தொழில்களும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்.
தொற்று நோய் பரவி வரும் சூழலில் மாண்டெட்டா பதவி நீக்கம் செய்யப்பட்டது பிரேசில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.