மலையக மக்களுக்கு மாற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவர் அமரர்.பெ.சந்திரசேகரன் என மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்நாதன்; தெரிவிப்பு.




ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-
லையக மக்களுக்கு மாற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவர் மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகர் அமரர் பெ.சந்திரசேகரன் என மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் 63 வது ஜனன தினத்தினை முன்னிட்டு கொட்டகலை வேற்றுடையார் காளியம்மன் ஆலயத்தின் அக்கட்சியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் விசேட பூஜை வழிபாடு ஒன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அவரின் பிறந்ததினத்தையொட்டி சுமார் 150 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 7 பேர்ச் காணியுரிமை , தனிவீடு என்ற திட்டங்களை முதன்முதலில் உருவாக்கியவர் அவர்தான் அது மாத்திரமன்றி பொலிஸ் திணைக்களத்தின் நியமனங்கள் கிராம சேவகர் நியமனங்கள் சமூர்த்தி நியமனங்கள் ஆகியவனவற்றையும் பெற்றுக்கொடுத்தார்.அது மாத்திரமன்றி மலையக மக்களுக்கு மின்சாரம் தேவையென்பதனையும் வலியுறுத்தி அதனையும் பெற்றுக்கொடுத்தார் அது மாத்திரமன்றி அவர் எப்பொழுதுமே குடும்பத்தில் உள்ளவர்களை அரசியலில் இணைக்க விரும்பவில்லை.
அவர் எப்பொழுதுமே மலையக மக்களுக்காகவும் மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மலையக மக்களுக்காக சிறை சென்று வந்தவர்.அவர் அன்று மக்களின் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு செயற்பாடுகளை அன்று வித்திட்டதன் காரணமாகவே இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்து அதன் சேவைகள் பொதுமக்களை சென்றடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் சிவஞானம் , நிர்வாக செயலாளர் அஜித்குமார் உபதலைவர் மயில்வாகனம் மத்திய குழு உறுப்பினர்களான ரவிராம் , மதியழகன் , இளைஞர் அணி அமைப்பாளர் சுரேன் ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -