இந்நிகழ்வுக்கு பௌண்டேசனின் நிறுவனர் மற்றும் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையேற்றார். பல துறைகளின் சிறந்த விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதில், தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம். ஜவ்பர்,
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் எம்.வை.எம். சித்தீக் மற்றும் காயத்ரி விக்கிமசிங்க, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எம்.எஸ். அமீர் ஹுஸைன், ராதா மேத்தா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவு உத்தியோகத்தர் ஜிப்ரியா இப்றாஹிம், மக்கள் தொடர்பு முன்னாள் அதிகாரி நாலக்க ஹேமந்த,
பணிப்பாளர் மரியம், ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எஸ். அர்ஹம், சுலைமான் ஆகிப் மொஹமட் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் எம்.ஏ.டி.கே. பெர்னாண்டோ (கட்டானை), டி.ஏ. மிதிலா மஹேஷி (ஹொரம்பாவ), எம்.ஆர். உஷ்ரா (கன்னத்தோட்டை), எம்.எச்.எப். அப்ரா (உன்னஸ்கிரிய), மற்றும் எம்.எம்.எப். மப்ரஹா (குருந்துவத்த கிந்தோட்டை) ஆகியோர், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிடமிருந்து மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த மடிக்கணினி வழங்கல் திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


















0 comments :
Post a Comment