வர்த்தகர்களுக்கான நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு




அஸ்லம் எஸ். மெளலானா-
ம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு திங்கட்கிழமை (10) சம்மாந்துறை பிரதேச சபை கூட்ட மன்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி முஹம்மட் ஸாஜீத் ஸமான் கலந்து கொண்டு, வியாபார நடவடிக்கைகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்ர்.

இதன்போது நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் தொடர்பாக ஸ்மார்ட் கானொளி ஊடாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளான எம்.எம்.எம் பஸ்மீர்,எ.பி.எம் இர்பான் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :