நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவலினை தொடர்ந்து பல நாட்களாக ஊரடங்கு சட்டம் நிலவி வருகிறது.
இந்த ஊரடங்கு சட்டததின் போது பொது மக்கள் வெளியில் வராது இருக்கவும், அதனை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் இந்த காலப்பகுதியில் தனது அறிவினை விருத்திச்செய்து கொள்வதற்காகவும் ஹட்டன் டிக்கோயா நகரசபை இந்த காலப்பகுதியில் நடமாடும் நூலகம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நடமாடும் நூலகம் இன்று (31) திகதி ஹட்டன் பண்டாரநாயக்க பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது வீடாக சென்று பிள்ளைகளுக்கு பெரியவர்களுக்கு தனது பொழுதினை வீணே கழிக்காது பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கு ஹட்டன் நகர சபை எல்லைக்குட்படட் பகுதியில் நூலக புத்தகங்களை வீடு விடாக சென்று வழங்கி வருகிறது.
இதற்கு நூகல அங்கத்துவம் பெற வேண்டிய அவசியமில்லை.இதன் மூலம் மாணவர்கள் தங்களது வாசிப்பு திறனை விருத்தி செய்து கொள்ள முடியும்.
ஆகவே ஊரடங்கு காலப்பகுதியில் விட்டை விட்டு வெளியில் வந்து விளையாடுவது சுற்றித்திரிவது போன்றன நிறுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டில் முடங்கி போய்வுள்ளோம.; அதனால் என்ன செய்வது என்று தெரியாது.இவ்வாறு இருக்கும் போது போரடிக்கும் ஆகவே இவ்வாறான வேளைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கும் போது அத நாட்டிக்கும் வீட்டிக்கும் பயனுள்ளதாக அமைந்து விடும் என தெரிவித்தனர்.