திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை கொரொனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(31) திருகோணமலை சிறைச்சாலையில், இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தலைமையில் நடைபெற்றது.செஞ்சிலுவை சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.பற்றிக், மற்றும் உதவியாளர் போல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதன் போது கைதிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாரான சுகாதார வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கிருமி தொளிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு,சிறைச்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாகவும் செஞ்சிலுவை சங்க பிரதி நிதிகள் அத்தியட்சகரிடம் கேட்டறிந்தார்கள்.
இதன் போது திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை கொரொனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பொருட்களும் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதான ஜெயிலர்,களஞ்சிய காப்பாளர்,புனர்வாழ்வு அதிகாரி,மருந்தாளர் போன்ற அதிகாரிகளும் கலந்து கொண்டார்காள்.