இலங்கையின் எட்டாவது ஜானாதிபதியை தெரிவுசெய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமை (16) காலை 7:00 மணிக்கு ஆரம்பமானது.
சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது சொந்த ஊரான காத்தான்குடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர். இந்த நாட்டு மக்கள் நாட்டை கட்டியெழுப்ப கூடிய, நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கு மக்கள் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் சரியான முடிவை எடுத்து இந்த நாடு கடந்த காலங்களில் முகம் கொண்ட இனவாத மதவாத செயற்பாடுகளில் இருந்து பொருளாதார சிக்கல்களில் இருந்து ஒரு சிறந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக இன்றைய தேர்தல் அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
இத்தேர்தல் களத்தில் நானும் வேட்பாளராக போட்டியிடுகிறேன் ஒரு சிறந்த ஜனாதிபதியை நாட்டுமக்கள் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறோம்.
அந்தவகையில் மக்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய நாட்டின் ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் என தெரிவித்தார்.