நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு



க.கிஷாந்தன்-
த்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு, இன்று (11) அதிகாலை திறக்கப்பட்டன.

மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்.கிளயார், டெவன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :