கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு



ஹஸ்பர் ஏ.எச்-
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவானது இன்று (17)நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுட்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ,பொதுஜன ஐக்கிய முண்ணனி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :