இலங்கையில் எட்டாவது அரச தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்ததல் வாக்கெடுப்பு இலங்கை முழுவதும் நடைபெறும் இதே வேளை தனது வாக்கினை முல்லை புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் காலை பத்து மணியளவில் பதிவு செய்த பின் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போதே வன்னி நாடாளு மன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் எவ்வளவுதான் கருத்தொருமித்து பேரினவாத சிந்தனை கொண்ட ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்தாலும் ஒரு ஜனநாய ஆட்சியாளரை கொண்டு வருவதில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்றும் நிலைத்து நிற்கும் தமிழர்கள் பல்வேறு நிர்வாக முறையிலான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவது வெளிப்படையே அந்த வகையில் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜெனாதிபதி நிச்சயமாக தமிழ் மக்களின் விடயங்களில் கரிசனை எடுத்து உடனடியாக அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்க மன்வர வேண்டும் அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மௌனிக்கப்பட்ட பின் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த சில தமிழ் கட்சிகளின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வருகிறது எப்பொழுதும் தமிழ் மக்களின் ஆரூடம் பிழையாகாது என்று கருத்து தெரிவித்த வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நூறு வீதம் வாக்கினை பதிவு செய்து ஜனநாயகத்திற்கு தொல் கொடுப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.