இரு பொலிஸாரின் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்



பாறுக் ஷிஹான்-
விடுதலைப் புலிகளால் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 35 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வின் பின்னர் இரு பொலிஸாரின் வீட்டுக்கு சென்று கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர நலன் விசாரித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் தௌபீக் வீட்டிற்கும் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இல்யாஸ் என்ற பொலிஸ் சார்ஜன்ட் உத்தியோகத்தரது வீட்டிற்கு சென்று நலன் குறித்து ஆராய்வதற்காக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர சென்றார்.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரது விடயத்தில் அக்கறையுடன் நலன்களை கேட்டறிந்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து உதவிகளைம் செய்வதற்கு உரிய தரப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றிரந்தது.

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை இபொத்துவில்இ அக்கரைப்பற்றுஇ சம்மாந்துறைஇ உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :