தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை; விராய் கெலி பல்தஸார் மேயராக தெரிவு



கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

இந்நிலையில் கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :