சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமைய தீபத் திருநாளை வரவேற்போம்!


பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா தீபாவளி வாழ்த்துச் செய்தி

நாட்டு மக்களுக்கும் மலையக மக்களுக்கும் சுபிட்சமான எதிர்காலம் அமைய வேண்டும் என பிரார்த்தித்து தீபத் திருநாளை மகிழ்வோடு வரவேற்போம் என தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

இருள் அகன்று இன்னொளி பரவி இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காகவே தீபாவளிப் பண்டிகையை எமது முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஒளி வெள்ளம் பாயா விட்டால் மக்கள் இருள் வெள்ளத்தில் மூழ்கி விடுவார்கள். அதேபோல், எமது மத்தியில் உள்ள அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடர் பிரகாசிக்கும் போதுதான் வாழ்க்கையில் உண்மையான அன்பும் மகழ்ச்சியும் ஏற்படுகின்றது.

நாம் அனைவரும் சமூக அக்கறையோடு எமது மத்தியில் காணப்படும் குறைகளைக் களையவும், கொள்கையில் சிறக்கவும், ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், உள்ளத்தில் உண்மை ஒளி தோன்றவும், வாக்கினிலே இனிமை உண்டாகவும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

அடுத்தவர் சொல்கின்ற விடயங்களை எல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல், சோக்ரட்டீஸ் சொன்னதைப் போன்று ஏன், எதற்காக, எப்படி என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த சிந்தனை ஒன்றுதான் மலையகத்தின் எதிர்காலத்துக்கு ஏற்றம் தரக் கூடிய ஒன்றாக அமையும். எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவிருந்தால் யாரிடமும் ஏமாற வேண்டிய அவசியம் இருக்காது. மலையக சமூகம் மீண்டும் மீண்டும் ஏமாந்து விடாமல் உறுதியான பாதையில் பயணிக்கவும்,எமக்குத் தேவையான தலைமையைத் தேர்ந்தெடுக்கவும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -