அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) கடந்த 2025.06.03 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்திருந்தார்
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிரின் அழைப்பின்பேரில் பேரில் வருகைதந்திருந்த பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை சிநேகபூர்வ அடிப்படையில் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினார்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (South Eastern University of Sri Lanka - SEUSL) மற்றும் இந்தியாவின் டார்ஜிலிங்கில் உள்ள சவுத்ஃபீல்ட் கல்லூரி (Southfield College) ஆகியவற்றின் இணைப்பில் நடைபெற்ற பன்னாட்டு பன்முகக் கல்வி மாநாட்டில் முக்கிய உரையாளர் (keynote speaker) ஆகப் பங்கேற்றிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment