நரகாசுரர்கள் உருவாகாமல் இருக்க தீபத் திருநாளில் உறுதி பூண வேண்டும்!


தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம்
தேவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த நரகாசுரன் முருகப் பெருமானால் வதம் செய்யப்பட்டதை நினைவுகூரும் நாளே தீபாவளிப் பண்டிகை என்று இந்து சமயம் கூறுகின்றது. அந்த நாளில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்க வேண்டும் என்பதே தத்துவம் ஆகும். எனவே, எமது அகத்திலும் புறத்திலும் நரகாசுரர்கள் உருவாகாமல் இருக்க இந்தப் பண்டிகை காலத்தில் தீப ஒளி ஏற்றி உறுதி பூணுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,
ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற தீபாவளிப் பண்டிகையை மக்கள் மகிழ்வோடு கொண்டாடுவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாடை அணிந்து, புதிய பலகாரங்கள் படைத்து, பட்டாசு கொளுத்தி, உற்றார் உறவினருடன் விருந்து உண்டு களிக்கும் இத்திருநாளில் குழந்தைகளை மகிழ்விப்பதே பெற்றோரின் சந்தோசமாக இருக்கின்றது. உழைக்கும் மக்கள் தமது துயரங்களை மறந்து குடும்பத்துடன் குதூகலிக்கும் நாளாக பண்டிகைகள் திகழ்கின்றன.

அதேபோல், சமூக ரீதியில் அநியாயத்துக்கு இடம் கொடுக்காமல் எமது புராணங்கள் கூறுகின்றபடி அதை ஒழித்துக் கட்ட வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கின்றது. மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய தீய பழக்கங்கள், பொழுது போக்குகள், விளையாட்டுகள் முதலானவற்றை புறந்தள்ளி வைத்து விட்டு நவீன உலகத்தின் சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை இதய சுத்தியுடனும், நிதானத்துடனும் மேற்கொள்ள வேண்டிய கடமையும் துணிச்சலும் மக்களுக்கு இருக்க வேண்டும்.

அந்த வகையில் எமது மத்தியில் நரகாசுரன்கள் தோன்றி மீண்டும் இருண்ட யுகத்துக்கு மக்களை அழைத்துச் செல்லாமல் இருக்கவும், நாட்டில் அமைதியும் நிம்மதியும் குடிகொள்ளவும், சீரும் சிறப்பும் மிக்க வாழ்வு அமையவும், மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்தத் தீபாவளி நன்னாளில் அதற்கான உறுதியைப் பூணவும், எல்லோரது வாழ்விலும் இன்பமும் இனிமையும் தங்கவும், நாடும் வீடும் நலம் பெறவும் மலையக மக்களின் வாழ்வு செழிக்கவும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -