அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரதான பாதையினை திறக்க கோரி 1500 மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டம்.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
க்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியினை திறக்குமாறு கோரி சுமார் 1800 இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் பொது மக்கள் இணைந்து இன்று ( 15) காலை 7.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை சுமார் மூன்று மணித்தியாலம் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல்மோரா கொழுந்து மடுவத்தின் முன் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டம் வைத்தியசாலையின் பிரதான வீதி ஊடாக பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையின் பாதையினை உடனே திற,பாதை திறக்கும் வரை போராட்டம் தொடரும்,வைத்திய அதிகாரியை உடனே மாற்று,நோயாளர்களின் உயிரை காவு கொள்ளாதே,போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டமாறு ஊர்வலமாக சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்க அக்கரபத்தனை பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நிலமையினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.
அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பாதை கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் குண்டு வெடிப்பின் பின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.இந்த பாதையினை திறக்குமாறு பல தடைவைகள் பொது மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கோரிக்கை முன் வைத்த போதிலும,; அதனை பொறுப்படுத்தாதன் காரணமாகவும், இது குறித்து அக்கரபத்தனை பிரதேச சபை ,,பொலிஸ் நிலையம் தொழிற்சங்க தலைவர்கள்,மத தலைவர்கள் உட்பட அனைவருக்கும் மனுக்கள் கொடுத்தனர். எனினும் எவரும் குறித்த விடயம் குறித்து இது வரை அதனை நிறைவேற்ற தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் பெல்மோரல் கீழ் மேல் பிரிவு கிரேன்லி மேல் கீல் பிரிவு உட்பட 5000 மேற்பட்ட பொது மக்கள் இந்த வைத்தியசாலையினை தான் பயன்படுத்துகின்றனர் அடிக்கடி இப்பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி பல நோயாளர்கள் இந்த வைத்தியசாலைக்கு தான் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.நோயாளர்கள் உடனடியாக கொண்டு வர வேண்டிய தேவை காணப்பட்;ட போதிலும் அவர்களுக்கு உடனடியாகக சிகிச்சை பெற்றுக்கொடுப்பற்கு முடியாத நிலை இந்த பாதை மூடப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ளது.இந்த பாதை மூடப்பட்டுள்ளதன் காரணமாக எவராவது உயி;ரிழந்தால் யார் பொறுப்பு கூறுவது இன்று நாட்டில் பயங்கர வாத அச்சுறுத்தல் இல்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது அப்படி என்றால் ஏன் இந்த வைத்தியசாலையின் பிரதானபாதையினை மூடி வைக்க வேண்டும்.
அரசாங்கம் நோயாளர்களை தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த பாதையினை செப்பனிட்டு செய்து கொடுத்தது. அது பாதையினை மூடி வைப்பதற்கா?எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால,; தாங்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டங்களை முன்னெடுக்க போவதாக இவர்கள் மேலும் தெரிவித்தனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -